நடைபெற்ற மது விற்பனை…. வசமாக சிக்கிய பெண்…. கைது செய்த போலீஸ்….!!!

மது விற்பனை செய்து கொண்டிருந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த பெண்ணை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் நல்லியான் தோட்டத்தில் வசித்து வரும் மனோகரின் மனைவி முத்துலட்சுமி என்பதும், அப்பகுதியில் அந்த பெண்  சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்தது.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்துலட்சுமியை கைது செய்ததோடு விற்பனைக்காக அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *