சட்டவிரோதமான செயல்…. சோதனையில் சிக்கிய 5 பேர்…. கைது செய்த போலீஸ்….!!!

சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்திலுள்ள வள்ளுவர் நகரில் மாநகராட்சி கட்டிடத்தின் பின்புறம் வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். இதனையடுத்து அங்கு மது  செய்து கொண்டிருந்தவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன், கோபி, வளர்மதி, சுரேஷ், அருண்குமார் ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 5 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 132 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *