“நடைபெற்ற அதிரடி சோதனை” வசமாக சிக்கிய 134 பேர்…. கைது செய்த போலீஸ்….!!!

தடையை மீறி மதுபானம் விற்பனை செய்த 134 பேர் பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு கடந்த 15-ஆம் தேதி மற்றும் முழு ஊரடங்கு ஆகிய இரு தினங்கள் டாஸ்மாக் கடைகள், பார்கள், ஓட்டல்களில் மது விற்பனை தடை செய்யப்பட்டிருந்தது. இந்த 2 நாட்களில் சட்டவிரோதமாக கரூர் மாவட்டத்தில் மது விற்பனை செய்த 134 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்த 1,322 மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அதோடு தீவிர வாகன சோதனை நடத்தியதில் முககவசம் அணியாமல் வெளியே வந்த 120 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனையடுத்து பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாத 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ 2500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது ஊரடங்கு நேரத்தில் விதிமுறைகளை மீறி வாகனங்களை சுற்றித்திரிந்த 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *