சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!!

சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ஏரிக்கரை பகுதியில் திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.

அதில் மது விற்பனை செய்யப்படுவது உறுதியானது. பின்னர் அங்கிருந்த நம்பரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அவர் வீரசோழபுரம் கிராமத்தை சேர்ந்த முரளி என்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முரளியை கைது செய்ததோடு விற்பனைக்காக அவரிடம் இருந்த 6 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *