“எங்கேயுமே கடை திறக்கவில்லை” அடித்துப் பிடித்து சரக்கு வாங்கிய மது பிரியர்கள்….!!!

மதுபான கடையில் மது பிரியர்கள் அடித்துப் பிடித்து சரக்கு வாங்கி சென்றனர்.

திருவள்ளுவர் தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தொடர்ந்து 2 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்தில் அமைந்துள்ள அயல்நாட்டு கடையில் மது பிரியர்கள் குவிந்து தேவையான சரக்குகளை வாங்கி சென்றனர்.

மேலும் சிலர் தங்களுக்கு மது கிடைக்காதோ என்ற அச்சத்தில் முண்டியடித்துக்கொண்டு வாங்கி சென்றனர். இதனால் அயல் நாட்டு மதுபான கடை நிர்வாகம் பெட்டி பெட்டியாக மதுபானங்களை கொள்முதல் செய்து அங்குள்ள கடையில் இருப்பு வைத்திருந்தனர். மேலும் முக கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே மது வாங்க அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *