திருட்டுத்தனமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த பெண் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்திலுள்ள புன்னம்சத்திரம் பகுதியில் வீட்டில் வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக வேலாயுதம்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ், வசந்தா, சாவித்திரி, வளர்மதி ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது. மேலும் இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்ததோடு விற்பனைக்காக அவர்களிடமிருந்த 20 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.