காட்டிற்குள் இது தான் நடக்குதா…. வசமாக சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!!

காட்டிற்குள் வைத்து கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் செல்லும் சாலையில் அமைந்திருக்கும் காட்டுப் பகுதியில் வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு புகார்கள் சென்றன. எனவே வெங்கமேடு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்துள்ளனர்.

அதில் அங்கு கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசித்து வரும் பிரபு என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தவுடன் விற்பனைக்காக அவரிடமிருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *