மது பாட்டில்கள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள காரணை பேருந்து நிறுத்தம் அருகே காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு மது பாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்த நபர் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஐயப்பனை கைது செய்ததோடு விற்பனைக்காக அவரிடமிருந்த 6 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.