தக்காளிக்களுகிடையே கடத்தப்பட்ட பொருள்… வசமாக சிக்கிய வாலிபர்கள்… கைது செய்த போலீஸ்…!!

தக்காளி கூடைகளுக்கிடையே மது பாட்டில்களை வைத்து கடத்தி வந்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து தமிழகத்திற்கு மதுபானங்கள் கடத்துவதை தடுக்க மதுவிலக்கு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தக்காளிகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரியை காவல்துறையினர்  மறித்து சோதனை செய்துள்ளனர். அப்போது தக்காளி கூடைகளுக்கு நடுவில் வைத்து மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

மேலும் காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை செய்துள்ளனர். விசாரணையின் போது காவேரி பட்டினத்தில் வசித்து வரும் அசோக் மற்றும் தினேஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து அவர்கள் வைத்திருந்த 528 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *