ஐயோ!… பிக்பாஸ் விக்ரமனின் திருமணத்தை நினைத்து கண்ணீர் விட்ட தந்தை….. மனதை உருக்கும் பேட்டி….!!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை தொட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, செரினா, அசல், விஜே மகேஸ்வரி, நிவாஷினி மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதன் பிறகு நிகழ்ச்சியில் பார்வையாளர்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக விக்ரமன் இருப்பதோடு, அதிக வாக்குகளையும் பெற்று வருகிறார்.

விக்ரமன் ஒரு சில சீரியலில் நடித்த நிலையில், அவர் நடித்த சீரியல்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் அரசியல் மற்றும் செய்திகளில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது பிக பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்ததால் வீட்டிற்குள் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் விக்ரமனின் தந்தை சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அப்போது உங்கள் மகனின் திருமணம் எப்போது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விக்ரமனின் தந்தை நானும் என்னுடைய மகனிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு பலமுறை கூறிவிட்டேன். ஆனால் அவன் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறான். ஒருவேளை நல்ல நிலைமைக்கு வந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறான் என்று நினைக்கிறேன் என கண்ணீர் மல்க கூறினார். மேலும் இந்த பேட்டியானது தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.