காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக ஏ.கே.சின்ஹா நியமனம் …!!

மத்திய நீர்வள ஆணைய தலைவரான ஏ.கே.சின்ஹா காவிரி மேலாண்மை ஆணைய தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகா_வின் காவேரியில் இருந்து தமிழகம் , புதுவை , கேரளா ஆகிய மாநிலங்களுக்கு உரிய காவிரி நீரை வழங்க உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று , சம்மபந்தப்பட்ட மாநில பிரதிநிதிகளை உள்ளடக்கி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை அமைத்தது மத்திய அரசு. இந்த குழுவின் தலைவராக  மசூத் ஹூசைன் இருந்து வந்தார்.இந்நிலையில் மசூத் ஹூசைன் பதவிக்காலம் சென்ற ஜூன் 30_ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது.

Image result for காவிரி மேலாண்மை ஆணையம்

இதையடுத்து மத்திய நீர்வள ஆணைய தலைவரான ஏ.கே.சின்ஹா காவிரி மேலாண்மை ஆணைய தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.மத்தியநீர்வள ஆணையம், காவிரி ஆணையத்துக்கு வேறு வேறு தலைவரை நியமிக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு. மத்தியநீர்வள ஆணையம், காவிரி மேலாண்மை ஆணையம் என 2 அமைப்புக்கும் ஏ.கே.சின்ஹா தலைவராக  நியமித்து பிரதமர் மோடி தலைமையிலான நியமன குழு உத்தரவிட்டுள்ளது.