அஜித் படத்தின் ரீலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்கள் கொண்டாட்டம்..!!

தல அஜித்தின் நேர்கொண்டபார்வை படத்தின் ரீலீஸ் தேதியை படக்குழு அறிவித்தால் ரசிகர்கள் மகிழ்ச்சி.

 

இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான படம் விஸ்வாசம் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது . இதைத்தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் – வித்யாபாலன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நேர்கொண்டபார்வை ’. இப்படம் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் இந்தியில் வெளியான `பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது அனைவரும்   அறிந்ததாகும் .

நேர்கொண்ட பார்வை க்கான பட முடிவு

மேலும் இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் , ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் , நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். தல அஜித் நடிப்பில் உருவாகும் இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10 -தேதி ரீலீஸாகும் என்று படக்குழு  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இதனால் தல அஜித்தின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதை பற்றி சுரேஷ் சந்திரன் தனது டுவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.