”AK 61” படத்தில் அஜித்துக்கு வில்லனாகும் பிரபல நடிகர்…. யாருன்னு பாருங்க….!!!

‘AK 61’படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிப்பவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனையடுத்து இவர் மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில் ”AK 61” படத்தில் நடிக்கிறார்.

ஜான் கொக்கன்

 

ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ‘AK 61’படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிப்பவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த படத்தில் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் வில்லனாக நடித்த ஜான் கொக்கன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *