மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித்…!!!

மீண்டும் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தி நடிகர் அமிதாப்பச்சன் நடித்து வெற்றிகரமாக ஓடிய படம்  ‘பிங்க்’. தற்போது இந்த படத்தை மையமாக கொண்டு நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் தல அஜித் நடித்து வருகிறார். இதில் மூன்று பெண்கள் ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொள்கின்றனர் அவர்களை காப்பாற்றும் வக்கீல் வேடத்தில் அஜித்குமார் நடித்துள்ளார்.மேலும் இவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். இப்படம் போனிகபூர் தயாரிப்பில், சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய வினோத் இயக்குகிறார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இப்படம் ஆகஸ்டு மாதம் திரைக்கு வர உள்ளது.

அஜித், சிவா க்கான பட முடிவு

 

மீண்டும் சிவா இயக்கத்தில், அஜித் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் இயக்குனர் சிவா, அஜித் கூட்டணியில் வெளிவந்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் வெளியாகின.இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சிவா தல அஜித்துக்கென்று புதிதாக ஒரு கதை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.