”ஊடுருவும் 200 பயங்கரவாதிகள்” அஜித் தோவால் எச்சரிக்கை…..!!

200க்கும் அதிகமான பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி செய்கின்றனர் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ-வை நீக்கி மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து காஷ்மீரில் அசாம்பாவித சம்பவம் எதுவும் நடக்காமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படை வீரர்கள் ஜம்மு முழுவதும்  குவிக்கப்பட்டுள்ளனர்.அங்கு பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு , செல்போன், இணையதள சேவை இரத்து செய்து அரசியல் கட்சி  தலைவர்களை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஜம்முவில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படுமென்று மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் கூறும்போது, சுமார் 230 பயங்கரவாதிகள் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளுக்குள் ஊடுருவ தயாராக இருப்பதாக உளவுதுறை எச்சரிக்கையை தெரிவித்தார்.இதில் சில பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் ஏற்கனவே பிடிபட்டுள்ளதாக தெரிவித்த அஜித் தோவால் ஜம்முவில் அமைதியை சீர்குலைப்பதற்கான பாகிஸ்தானின் ஒரே ஆயுதம் பயங்கரவாதம் என்று குற்றம் சாட்டினார்.