அரசியல்வாதி ஆகிறார் நடிகர் அஜித் ..!!

சமூகத்தில் நடக்கக்கூடிய பிரச்சனைகளை தட்டிக்கேட்கும் அரசியல் கதைக்களத்தை நடிகர் அஜித் தேர்ந்தெடுத்து தற்போழுது நடிக்க தயாராகி வருகிறார் .

நடிகர் அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் அடுத்த படத்தில் நடிப்பதற்கான கதை களத்தை நடிகர் அஜித் தேடி வந்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் வினோத் தல அஜித்தை சந்தித்து தன்னிடம் ஒரு போலீஸ் கதாபாத்திரம் கொண்ட ஒரு கதை உள்ளது, அதில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று அஜித்திடம் கதையை கூறியுள்ளார் .இதனைக் கேட்ட அஜித் கதை பிடிக்காத காரணத்தினால் இந்தக் கதை வேண்டாம் வேறு ஏதேனும் கதை இருந்தால் கூறுங்கள் என்று தெரிவித்துள்ளார் .

 

இதனை அடுத்து தற்பொழுது சமூகத்தில் நடக்கக் கூடிய அனைத்து பிரச்சனைகளையும் தட்டிக் கேட்கும் ஒரு சமூக ஆர்வலரின் பொலிடிக்கல் திரில்லர் கதையை அஜித்திடம் கூறியுள்ளார் .இந்த கதை மிகவும் பிடித்ததால் இதில் நடிப்பதற்கு நடிகர் அஜித் ஒப்புக் கொண்டுள்ளார்.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *