“ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடி ரூ. 1 கோடிக்கு சொகுசு வீடு வாங்கிய பணிப்பெண்”…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்…!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் தன் வீட்டில் இருந்த தங்க நகைகள், வைரம் மற்றும் நவரத்தினத்தின் கற்கள் ஆகியவை திருடப்பட்டு இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் கடந்த 2019-ம் ஆண்டு 3 முறை வீடு மாறிய போதும் லாக்கரில் இருந்த நகைகளை எடுக்கவில்லை எனவும், லாக்கரில் நகைகள் இருந்தது தன் வீட்டு வேலைக்காரர்களுக்கும் தெரியும் என புகாரில் ஐஸ்வர்யா தெரிவித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஈஸ்வரி என்ற பணிப்பெண் வங்கி கணக்கில் பணப்புழக்கம் இருந்தது தெரியவந்தது.

கடந்த 4 வருடங்களாக ஐஸ்வர்யா வீட்டில் திருடிய தங்க நகைகளை ஈஸ்வரி சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்பனை செய்து பணம் பெற்றுள்ளார். நகைகளை வாங்கிய கடைக்காரரிடம் இருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள் மற்றும் வெள்ளி கட்டிகள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஈஸ்வரி வங்கியிலிருந்து வாங்கிய 95 லட்சம் ரூபாய் கடனை 2 வருடங்களில் அடைத்துள்ளார். இதற்கு கார் டிரைவர் வெங்கடேஷுன் ஈஸ்வரிக்கு துணையாக இருந்துள்ளார். வெங்கடேஷ் மற்றும் ஈஸ்வரியை காவல்துறையினர் கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் திருடிய நகைகள் மூலம் 1 கோடி ரூபாய்க்கு ஈஸ்வரி சொகுசு வீடு வாங்கியது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.