இதுவரை இப்படி இருந்ததே இல்லை… மொத்தம் 78 விமானம் தான்… வெறிச்சோடி காணப்பட்ட விமான நிலையம்..!!

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் வரத்து குறைவால் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வருகிற 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் விமான நிலையங்களில் உள்நாட்டு விமான பயணிகள் அவசர வேலைகளுக்காக பயணிக்கலாம் என்று விலக்கு அளித்துள்ளது.  இந்நிலையில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் விமான சேவைகள் இதுவரை இல்லாத அளவுக்கு பெருமளவு குறைந்துள்ளது.

சென்னையிலிருந்து நாட்டின் பிற நகரங்களுக்கு 38 புறப்பாடு உள்நாட்டு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அந்த விமானத்தில் 2,400 பயணிகள் மட்டுமே பயணித்துள்ளனர். இதனையடுத்து சென்னைக்கு பிற நகரங்களிலிருந்து 40 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. அந்த விமானத்தில் 300 பேர் மட்டுமே பயணித்துள்ளனர். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் மொத்தம் 78 விமானங்கள் மட்டுமே இயங்கியதால் விமான நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *