டெல்லியில் அபாய அளவை எட்டிய காற்று மாசுபாடு…. கட்டுமான பணிகளுக்கு அதிரடி தடை….!!!!!

தலைநகர் டெல்லியில் தொடர்ந்து காற்று மாசுபாடு மோசமாகி அபாய அளவை எட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக நிலவி வந்ததை தவிர தற்போது காற்று மாசுபாடானது மிகவும் மோசமாகியுள்ளது. டெல்லியில் தற்போது காற்று தரக் குறியீடு 407 ஆக இருக்கிறது. இதனால் அதிகாலை நேரத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதோடு மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்படுகிறது.

இந்த காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு காற்று தர மேலாண்மை ஆணையம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து காற்றின் மாசுபாடு அதிகரித்து வருவதால் கட்டுமான தொழில்கள் அனைத்தையும் நிறுத்த வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது. மேலும் புதிய நாடாளுமன்ற கட்டிட பணி மற்றும் தேச நலனுக்காக கட்டப்படும் ரயில்வே துறை சார்ந்த பணிகள் போன்ற கட்டுமான பணிகளை மட்டும் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.