அதிமுக_வின் இரண்டாம் கட்ட நேர்காணல் தொடங்கியது….!!

மக்களவை தேர்தலுக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு இரண்டாம் கட்டமாக நேர்காணல் தொடங்கி நடைபெற்று வருகின்றது .

அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் நேர்காணல் இன்றும் நாளையும் நடைபெறுகின்றது . இன்று காலை நடைபெற்ற நேர்காணலில் சேலம் , கள்ளக்குறிச்சி , நாமக்கல் , ஈரோடு , திருப்பூர் , நீலகிரி , கோயம்புத்தூர் , பொள்ளாச்சி மற்றும் விழுப்புரம் என 10 தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் மதியம் இரண்டாம் கட்டமாக திண்டுக்கல் , விருதுநகர் , மதுரை ,  தேனி , சிவகங்கை , ராமநாதபுரம் ,  தூத்துக்குடி,  சிவகாசி திருநெல்வேலி மற்றும்  கன்னியாகுமரி ஆகிய பத்து தொகுதிகளுக்கு நேர்காணல் தொடங்கியுள்ளது.

 

 

இதில் தொகுதி வாரியாக  விருப்பமனு அளித்தவர்கள் வேட்பாளர்கள் அமரவைக்கப்பட்டுள்ளனர் . முதலாவதாக தேனி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த வேட்பாளர்களுக்கு நேர்காணல் நடைபெற்று வருகின்றது . இதில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் இந்த நேர்காணலில் பங்கேற்க வந்துள்ளார் அவர் தேனி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட 2 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு விருப்பம் மனு அளித்திருந்தார் . இதில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி , வைத்தியலிங்கம் , கே.பி முனியசாமி மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர் .