அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், வரும் ஜனவரி மாதம் சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

இது குறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஜனவரி 4-ம் தேதி சேலம் வீரபாண்டி தொகுதியிலும், ஜனவரி 5-ம் தேதி கள்ளக்குறிச்சியில் மகளிர் அணி சார்பிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கூட்டங்களிலும் கலந்துகொள்ளும் இபிஎஸ், சிறப்புரையாற்றி தொண்டர்களை உற்சாகப்படுத்த உள்ளார்.