அதிமுக செய்தி தொடர்பாளர்கள் ஊடகங்களை சந்திக்க தடை..!!

அதிமுக செய்தி தொடர்பாளர்கள் மறு அறிவிப்பு வரும் வரை எந்த ஒரு கருத்தையும்  ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என்று அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது   

அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின்  தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அதிமுக எம்பி, எம்.எல்.ஏ க்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.  இக்கூட்டத்தில் நடந்து முடிந்த தேர்தல் தோல்வி, உட் கட்சியின் பிரச்சனை, கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் ஆகியவை குறித்து  விவாதிக்கப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பரபரப்பு இல்லாமல் இந்த கூட்டத்தில்  5 தீர்மானம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.

Seithi Solai

இந்நிலையில் அதிமுக தலைமை கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்த அறிக்கையில் அதிமுக செய்தி தொடர்பாளர்கள் மறு அறிவிப்பு வரும் வரை எந்த ஒரு கருத்தையும் ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம். மீறி கருத்து தெரிவிப்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். கட்சி நிர்வாகிகளின் ஒப்புதலை பெற்ற கருத்துக்களை மட்டுமே தெரிவிக்க செய்தி தொடர்பாளருக்கு உரிமை உண்டு. அதிமுக ஆதரவாளர்கள் என்ற பெயரில் யாரையும் அழைத்து ஊடகம் மற்றும் பத்திரிக்கை நிறுவனங்கள் கருத்து கேற்க வேண்டாம்” என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.