ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளராக போட்டியிட்ட EVKS இளங்கோவன் அதிமுக வேட்பாளர் 48 ஆயிரம் வாக்குகள் வித்தியாத்தில் முன்னிலை பெற்று வருகிறார். அதிமுக டெபாசிட் வாங்குமா ? என்று அக்கட்சி தொண்டர்கள் எதிர்நோக்கி இருந்த நிலையில் ஒருவழியாக அதிமுக டெபாசிட்டை பெற்றது. டெபாசிட் பெற 28,375 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் அதை விட அதிகம் ( 28, 637 வாக்குகள் ) பெற்று டெபாசிட்டை தக்க வைத்துள்ளார் அதிமுகவின் தென்னரசு.