ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் அரசியல் களம் சூடு பிடித்தது. குறிப்பாக அதிமுகவில் பெரும் பரபரப்பு உச்சகட்டத்தை எட்டி இருந்தது. இதையெல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சி இன்று காலை அதிமுகவுக்கு ஆதரவு அளித்தது. முன்னதாக அதிமுக சார்பில் ஓபிஎஸ் – இபிஎஸ் என தனித்தனி அணிகளாக வேட்பாளரை களம் இறக்கின. அதிமுக விவகாரத்தை கையிலெடுத்து, சமரசம் செய்யும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்ட பாஜகவின் முயற்சி தோல்வியில் முடியவே, நீதிமன்றத்தின் உத்தரவால் தற்போது ஒரு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாகவே பாஜக அதிமுக உள்ள விவகாரங்களில் தலையிடுகிறது. எடப்பாடியின் தலைமையை பாஜக விரும்பவில்லை என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில் தற்போது வெளியாகி உள்ள ஒரு ஆடியோ அதிமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தேர்தலில் அதிமுக ஜெயிக்க கூடாது, அதிமுக வெற்றி பெறக் கூடாது, இரட்டை இலை சின்னத்தை வைத்துக்கொண்டு டெபாசிட் இழக்க வேண்டும். அண்ணாமலை ஏதோ அறிக்கை வெளியிட்டு விட்டார்.
நம்ம கட்சி ஆளுங்க யாரும் இரட்டை இலைக்கு ஓட்டு போட்ற கூடாது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸுக்கு ஓட்டு போட வேண்டும் என்று பேசும் ஒரு ஆடியோ ட்விட்டரில் வைரல் ஆகி வருகிறது. இதை பாஜகவின் பார்ரூம்பில் உள்ளவர்கள் பேசுவதாக ஒரு சிலர் குறிப்பிட்டு சொல்லி அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளனர். அதேபோல் அந்த ஆடியோவில் பேசும் யாரும் பாஜகவினர் இல்லை என்றும் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இந்த ஆடியோ பரவி வருவது அதிமுகவினருக்கு பெரும் தர்ம சங்கடத்திற்கு ஏற்படுத்தியுள்ளது.
இரட்டை இலை தோற்க வேண்டும், டெபாசிட் இழக்க வேண்டும் என பிஜேபியின் வார் ரூம் குரூப் ஸ்பேஸ் போட்டு பேசுகிறார்கள்.இவர்கள் இப்படி பேசுவது அண்ணாமலையின் உத்தரவினால் தானா?
ஆனா இப்படியே இருங்கப்பா மாறிடாதீங்க! 😂
விவாதிப்போம் இன்றைய ஸ்பேஸில் 😂 pic.twitter.com/azL7zHWOi0
— இந்திராணி M.Sc.,LLB, (@IndiraniSudala1) February 7, 2023