அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் வருகிற 28-ம் தேதி நடைபெறும் – தலைமை கழகம் அறிவிப்பு..!!

அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் வருகிற 28-ம் தேதி காலை 11.30 மணிக்கு நடைபெறும் என்று  அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.  

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடர்பாக அதிமுக தலைமை கழகம் இன்று அறிக்கை ஒன்றை  வெளியிட்டது. அதில், தமிழ் நாடு சட்டப்பேரவையில், 2019-2020 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளதை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி  ஆகியோர் தலைமையில், வருகிற 28-ம் தேதி வெள்ளிக்கிழமை, காலை 11.30 மணிக்கு எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

Related image

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும், அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.