பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கக்கூடிய ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக தனது வேட்பாளரை அறிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இதுவரை தெரிவிக்கப்படாத நிலையில் அதிமுக பாஜகவை கழட்டிவிட்டு புதிய கூட்டணி அமைத்துள்ளது. குறிப்பாக இன்று தேர்தல் பணிமனை திறக்கப்பட்டது. அதில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என புதிய பெயர் கொண்டு கூட்டணி தலைவர்களின் பெயர் இடம் பெற்றிருந்தன.
அதில் மோடி படமோ, அமித் ஷா படமோ, அண்ணாமலை படமோ இடம்பெறவில்லை. அதேபோல ஜி கே வாசன் கிருஷ்ணசாமி, ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்கள் அதிமுக பேனரில் இடம்பெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த அதிமுக தற்போது பாஜகவை கழற்றிவிட்டு தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று பெயரில் தேர்தலில் களம் காண்கின்றது பாஜகவில் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.