பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கக்கூடிய ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக தனது வேட்பாளரை அறிவித்திருக்கின்றது. பாரதிய ஜனதா கட்சியினுடைய நிலைப்பாட்டு என்ன என்பது குறித்து இதுவரையும் வெளியிடப்படாத நிலையில் அதனுடைய நிலைப்பாட்டிற்காக காத்திருந்த அதிமுகவினுடைய எடப்பாடி அணி பாஜகவை கழற்றிவிட்டு தற்போது புதிய கூட்டணியை உருவாக்கி இருக்கின்றது. குறிப்பாக தேர்தல் பணிமனை திறக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்தல் பணிமனையில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என ஒரு பெயர் வைத்து கூட்டணியை அமைத்திருக்கிறது.
ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிகள் தான் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. தேசிய அளவிலான ஒரு கூட்டணியாக அந்த கூட்டணி இருந்தது. இந்த நிலையில் பாஜக இந்த கூட்டணியில் தொடர்கிறதா ? பாஜகவினுடைய ஆதரவு யாருக்கு ? இரண்டு அதிமுகவும் தேர்தலில் களம் இறங்குகின்றன. இதில் யாருக்கு தங்களுடைய ஆதரவு என்பதில் தொடர்ச்சியாக பாஜக மௌனம் காத்து வருகின்றது.
நேற்று பாஜகனுடைய கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் கூட அதிமுக பாஜகவிற்காக காத்திருந்தது. ஆனால் எதனையுமே பாஜக சொல்லாத நிலையில் பாஜகவை புறக்கணித்துவிட்டு, பாஜகவை கழட்டிவிட்டு தற்போது புது கூட்டணியை அமைத்து தேர்தலில் களமிறங்கி இருக்கிறது.
குறிப்பாக ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சியும் இதில் இடம் பெறவில்லை. தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என புதிய பெயர் சூட்டப்பட்டு இதில் ஜி கே வாசன், டாக்டர் கிருஷ்ணசாமி ஜெகன் மூர்த்தி ஆகிய மூன்று பேரின் புகைப்படங்கள் மட்டுமே போடப்பட்டுள்ளது. மோடி, அமித் ஷா, அண்ணாமலை படமோ, பாஜகவின் கொடியோ தேர்தல் பணி மனை அலுவலகத்தில் பயன்படுத்தப்படவில்லை.