“மத்திய அமைச்சரவையில் அதிமுக” உரிய நேரத்தில் பரிசீலிக்கப்படும்… பாஜக இல.கணேசன் கருத்து…!!

மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது  நேரத்தில் பரிசீலிக்கப்படுமென்று   பாஜக_வின் இல.கணேசன்  தெரிவித்துள்ளார்.

மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு மாநில முதல்வர்கள் , ஆளுநர்கள் பங்கேற்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி கட்சி அதிமுக என்பதால் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரும் டெல்லி சென்றனர். அதிமுக_விற்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட சுழலில் அதிமுக_விற்கு இடமில்லாமலே அமைச்சரவை பொறுப்பேற்றது.

ரவீந்திரநாத் குமார் க்கான பட முடிவு

தமிழகத்தில் அதிமுக கூட்டணியின் பாஜக இடம்பெற்று தேனி மக்களவை தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றுள்ள சூழலில் அங்கு வெற்றி பெற்ற  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி கிடைக்காததையடுத்து அதிமுக தலைமை கடுப்பாகி உள்ளது.

இந்நிலையில் பாஜகவின் இல.கணேசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும் போது ,மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெற உரிய நேரத்தில் நிச்சயம் பரிசீலிக்கப்படும் தற்போது அதிமுகவுக்கு இடம்தராவிட்டாலும் இது முழுமையான அமைச்சரவை இல்லை என்று தெரிவித்துள்ளார்.