அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டி… ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு…!!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தான் தயாராக இருப்பதாக மீண்டும் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ஏற்கனவே நீதிமன்றத்தில் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தான் தயாராக இருப்பதாகவும் விதிமுறைகளை மாற்றினால் தான் தொடர்ந்து அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் ஓபிஎஸ் கூறினார். இந்நிலையில் தற்போது மயிலாடுதுறையில் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது, அதிமுகவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் இருந்த விதிகள் மாற்றப்பட்டுள்ளது. அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டும் தான் வெற்றி நிச்சயம். அதிமுகவில் உள்ள புதிய விதிகள் நீக்கப்பட்டு பழைய விதிகள் தொடர்ந்தால் நான் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராக இருக்கிறேன். மேலும் ஓபிஎஸ்-ன் இந்த அறிவிப்பு தற்போது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.