அதிமுக , பாஜக , திமுக_வை விழ்த்துவதே குறிக்கோள்….. TTV.தினகரன் பேட்டி…!!

அதிமுக , பாஜக மற்றும் திமுக_வை விழ்த்துவதே குறிக்கோள் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் TTV.தினகரன் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் இரட்டை இல்லை சின்னம்  அதிமுக_விற்கு  ஒதுக்கியதற்கு தடை விதிக்கமுடியாது என்று கூறியது .மேலும் குக்கர் சின்னத்தை ஒதுக்குவது குறித்த விளக்கத்தை தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டுள்ளது . இந்நிலையில் செய்தியலாளர்களை சந்தித்த அமமுக துணை பொது செயலாளர் TTV .தினகரன் கூறுகையில் , எங்களின் எதிரிகளும் , துரோகிகளும் சேர்ந்து அவர்களுடைய அரசாங்க பலத்தை வைத்து பல தடைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் . அம்மாவின் தொண்டர்கள் 95 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஆதரவாக இருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவும் ஆசிர்வாதமும் எங்களுக்கு இருக்கின்றது  என்று தெரிவித்தார் .

Image result for TTV.தினகரன்

தொடர்ந்து பேசிய அவர் , பொள்ளாச்சி சம்பவத்தில் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டனை பெற வேண்டும் . போராட்டம் செய்யும் மாணவர்களை காவல்துறை கைது செய்தால் மாணவர்களுக்கு ஆதரவாக நாங்களும் போராட்ட களத்தில் இறங்குவோம். தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து கொண்டிருக்கும் அதிமுக , பாஜக , வஞ்சித்த திமுக , அதனுடைய கூட்டணி கட்சிகள் எல்லாருமே எங்களின் எதிரிகள் . ஜனநாயக முறைப்படி தேர்தலில் அவர்களை விழ்த்துவதே அம்மா முன்னேற்றக் கழகத்தின் ஒரே குறிக்கோள் என்று அவர் கூறினார்.