அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு ….!!

அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது .

Image result for அதிமுக கூட்டணி

தமிழகத்தில் அதிமுக தலைமையில் அதிமுக 20 , பாஜக 5 , பாமக 7 , தேமுதிக 4 , புதிய தமிழகம் 1 , புதிய நீதி கட்சி 1 , தமாக 1 , N,.R காங்கிரஸ் ( புதுச்சேரி ) தொகுதியிலும் போட்டியிடுகின்றது என்று தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது . மேலும் அதிமுக கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகின்றது என்கின்ற தொகுதி பட்டியல் வெளியாக தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில் இன்று கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் அறிவிப்பு வெளியாக இருக்கின்றது.

சென்னையில் உள்ள கிரவுண்ட் பிளாசா தனியார் விடுதியில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று போட்டியிடும் தொகுதி பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை வெளியிட்டார்.

அதிமுக போட்டியிடும் தொகுதிகள் : (20)

சேலம் , நாமக்கல் , கிருஷ்ணகிரி , ஈரோடு , கரூர் , திருப்பூர் , பொள்ளாச்சி , ஆரணி , திருவண்ணாமலை , சிதம்பரம் தனி , பெரம்பலூர் , தேனி , மதுரை , நீலகிரி , திருநெல்வேலி , நாகப்பட்டினம் , மயிலாடுதுறை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் மற்றும் சென்னை (தெற்கு)

பாமக போட்டியிடும் தொகுதிக்கு : (7)

Image result for அதிமுக கூட்டணி

தர்மபுரி , விழுப்புரம் , அரக்கோணம் , கடலூர் , மத்திய சென்னை , திண்டுக்கல் , ஸ்ரீபெரும்புதூர் .

பிஜேபி போட்டியிடும் தொகுதிகள் : ( 5 )

கன்னியாகுமரி , சிவகங்கை , கோயம்புத்தூர் , இராமநாதபுரம் , தூத்துக்குடி .

தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் : (4)

 

கள்ளக்குறிச்சி , திருச்சிராப்பள்ளி , சென்னை வடக்கு , விருதுநகர் .

தமாக (1) தஞ்சாவூர் . புதிய தமிழகம் (1) தென்காசி . புதிய நீதிக்கட்சி (1) வேலூர் . அகில இந்திய என் ஆர் காங்கிரஸ் கட்சி புதுச்சேரி (1) என்று போட்டியிடும் என்று அறிவித்தார்.