“6 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்”…. சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் அசத்திய முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் கடந்த 2 வருடங்களில் பல்வேறு துறை சார்ந்த முதலீட்டு ஊக்குவிப்புகளை நடத்தி இதுவரை 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2,95,339 கோடி ரூபாய் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு 4,12,565 பேருக்கு வேலை வாய்ப்புகளும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களில் 4,800 கோடி ரூபாய் முதலீட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் இதன் மூலம் 6,200 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

https://twitter.com/TNDIPRNEWS/status/1661344220056256512?s=20