அக்னி தேவி திரைப்படத்தை வெளியிட நீதிமன்றம் தடை ..

 பிரபல நடிகர் பாபி சிம்ஹா அவர்கள் நடித்த  அக்னி தேவி எனும் திரைப்படத்தை வெளியிடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது

கோவையைச் சேர்ந்த இயக்குனர் ஜான் பால்ராஜ் என்பவர் தற்போது அக்னி  தேவி எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்தப் படத்திற்கான ட்ரெய்லர் ஆனது சமீபத்தில் வெளியானது இதனை அடுத்து இந்த படத்தின் ட்ரைலரை வைத்தே இந்த படம் ஒரு சர்ச்சைக்குரிய படம் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

இதனையடுத்து இந்த திரைப்படத்தில் ஒரு சில வருடங்களுக்கு முன்பு நடந்த  ராம்குமார் சுவாதி கொலை வழக்கு தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது இந்த கொலை வழக்கு குறித்த சம்பவங்கள் படத்தில் அப்படியே இடம் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இந்த படத்தின் டிரைலரும் அதே போல தான் குறிக்கிறது ராம்குமார் சுவாதி கொலை வழக்கில் சுவாதி கொலை செய்யப்பட்ட ரயில் நிலையம் உட்பட அனைத்தும் படத்தின் ட்ரெய்லர் காட்சிகளில் இடம்பெற்று உள்ளது இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த படம் ஒரு பொலிடிக்கல் திரில்லர் படமாக இருக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது இந்தத் திரைப்படத்தில் பாபிசிம்ஹா அவர்கள் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பாபி சிம்ஹா அவர்களின் ரசிகர்கள் இந்த படம் வருவதற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் இந்தப்படம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாக தயாராக உள்ளது .

இந்நிலையில் பாபி சிம்ஹா அவர்கள் இந்த திரைப்படம் வெளியிடக்கூடாது என்று கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் ஏனென்றால் பாபி சிம்ஹா இந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொள்வதற்கு முன் தன்னிடம் கூறப்பட்ட கதை வேறு என்றும் தான் நடிக்கும் பொழுது கூறப்பட்ட கதை வேறு ஆகையால் இந்த படத்தில் நடிப்பதற்கு துளியளவும் விருப்பமில்லாமல் பாதியில் விலகி விட்டதாகவும் தற்போது இந்த திரைப்படத்தை என்னை போன்ற டூப்  மூலம் எடுத்து திரையில் வெளியிட உள்ளார்கள் இவ்வாறு  செய்வது தவறு என்று கூறி கோவை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார் இந்நிலையில் இதனை விசாரித்த நீதிபதிகள் அக்னி தேவி திரைப்படம் திரையிடுவதற்கு தடை விதித்துள்ளனர்.