இயக்குனர் ஜான்பால்ராஜ் கோவையை சேர்ந்தவர். இவர் இயக்கத்தில் பாபி சிம்ஹா நடித்துள்ள படத்தின் பெயர் அக்னி தேவ். இந்தப் படத்தை இயக்குனர் முதலில் தன்னிடம் சொன்ன கதையின் படி எடுக்காமல் வேறு விதமான கதையில் படம் எடுக்கப்பட்டதால் நான் அதில் தொடர்ந்து நடிக்கமுடியாது என்று கூறி கோவை நீதிமன்றத்தில் பாபி சிம்ஹா வழக்கு தொடர்ந்தார்.

பாபி சிம்ஹா அளித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தற்போது அதனை மீறி அக்னி தேவி என்று படத்தின் தலைப்பை மாற்றி விட்டனர். இதில் தனக்குப் பதிலாக வேறு ஒருவரை வைத்து டூப் போட்டு படத்தை எடுத்து விட்டதாக பரங்கிமலை காவல் துணை ஆணையரிடம் பாபி சிம்ஹா இயக்குநர் ஜான்பால்ராஜ் மீது புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கை விசாரித்த கோவை நீதிமன்றம் “அக்னி தேவி” திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் தற்போது படத்தை வெளியிடுவதற்கு தடை விதித்துள்ளது.