இந்துத்துவா படையெடுப்பை எதிர்ப்பேன்…வைகோ பேட்டி..!!

மதச்சார்பின்மைக்கு எதிராக இருக்கும் இந்துத்துவா படையெடுப்பை எதிர்ப்பேன் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு 6 புதிய MPக்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முகமது ஜான், சந்திரசேகர், பாமக அன்புமணி ராமதாஸ் ஆகிய 3 பேர் மற்றும் திமுக சார்பில் போட்டியிட்ட  சண்முகம்,வில்சன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகிய 3 பேர் என மொத்தம் 6 பேர் தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

Image result for vaiko

இந்நிலையில் திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட வைகோ உள்ளிட்ட 3 புதிய MPக்கள் அக்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்களுடன் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டதற்கான  சான்றிதழை பெற்றனர்.இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைகோ மதச்சார்பின்மைக்கு எதிராக இருக்கும் இந்துத்துவா படையெடுப்பை எதிர்ப்பேன் என்றும்,கூட்டாட்சி தத்துவத்தை காக்க கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.