மீண்டும் தமிழ் படத்தில் நோட்டா ஹீரோ…..

நோட்டா திரைப்படத்திற்குப் பின்பு  டியர் காம்ரேட் என்னும் திரைப்படம் மூலம் தமிழ் திரையில் மீண்டும் அறிமுகமாக உள்ளார் விஜய் தேவர கொண்டா

தற்பொழுது இளைஞர்களால் அதிகம் பின்பற்றப்படும் ஒரு பிரபல நடிகர் விஜய் தேவர  கொண்டா  இவரது படத்தை தற்பொழுது அதிகம் கொண்டாடுபவர்கள் இளைஞர்கள்தான் ஏனென்றால் தற்போது இளைஞர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளுக்கு ஏற்ப அதே பாணியில் நடித்து இவரது படங்கள் வெளிவருவதால் இளைஞர்கள் இவரை மிகவும் விரும்புகின்றனர் சமீபத்தில் தமிழ் மொழியில் நோட்டா என்னும் திரைப்படத்தில் நடித்து அந்த திரைப்படம் தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை இவருக்குப் பெற்றுத் தந்தது.

இதனை தொடர்ந்து மீண்டும் விஜய் தேவர கொண்டா  தமிழில் மற்றொரு படம் நடித்து வருகிறார் டியர்  காம்ரேட் என்னும் இந்தத் திரைப்படத்தை பாரத் கம்மா  என்னும் இயக்குனர் இயக்கி வருகிறார் இந்த திரைப்படமானது தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் இயக்கப்பட்டு தற்போது படப்பிடிப்பு முடிந்து வரும் நிலையில் வெளியாக தயாராகி இருக்கிறது மேலும் இந்தப் படத்திற்கான டீஸர் தற்போது வெளியானது இந்த டீசரில் முதல் பாகம் சண்டைக்காட்சிகளும் ரவுடித்தனமும் நிறைந்ததாக உள்ளது பின் வரக்கூடிய மற்றொரு காட்சியானது முழுக்க முழுக்க காதல் சார்ந்த ரொமான்டிக் காட்சிகளாக இருக்கிறது

ஆகையால் இந்த படம் ஒரு கமர்ஷியல் படமாக அமையும் என்றும் மீண்டும் விஜய் தேவர  கொண்டா அவர்களுக்கு தமிழில் ஒரு மிகப்பெரிய வெற்றியை இந்த படம் பெற்றுத் தரும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது இந்த படமானது வருகின்ற மே 31ஆம் தேதி வெளியாகிறது என்று அதிகாரபூர்வமாக படக்குழுவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது