“மீண்டும் மொழிப் போர் ” அறிக்கை வெளியீடு செய்த வைகோ ..!!

புதிய கல்வி கொள்கையை அறிமுகப்படுத்தினாள் மீண்டும் மொழிப்போர் நடக்கும் என்று வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார் .

அரசுப் பள்ளிகளை தனியாரிடம் தாரை வார்க்கும் நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருவதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தமிழ்நாடு இந்திய மாணவர் சங்கத்தினர் இதற்கு  எதிராக மாநிலம் முழுவதும் சைக்கிள் பிரசாரம் மேற்கொண்டு அது தற்போது அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது.

இவ்வாறு நடந்து கொண்டிருக்கையில் மத்திய அரசு மற்றொரு புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டிருப்பதாவது, கல்வியை முற்றிலுமாக அரசிடம் இருந்து பிரித்து தனியாரிடம் தாரை வார்க்கும் கொள்கைகளை  கஸ்தூரிரங்கன் குழு மத்திய அரசிற்கு பரிந்துரை செய்து வருகிறது.

அவரது பரிந்துரைகளை மத்திய அரசானது ஏற்காமல் நிராகரிக்க வேண்டும் என்றும் மீறி ஏற்று அதனை நடைமுறைப் படுத்தினால் மீண்டும் ஒரு மொழிப் போர் வெடிக்கும் என்றும் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.