தமிழகத்திற்கு பாஜக பாரபட்சமாக நடந்து கொள்ளாது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், தமிழகத்தை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை என்ற ஒரு பொய்யான பிரச்சாரத்தை எதிர்க்கட்சிகள் சொல்லி வந்தனர். ஆனால் தமிழகத்திடம் பாஜக பாரபட்சமாக நடந்து கொள்ளாது என்று நான் மீண்டும் மீண்டும் கூறிவந்தேன் என்றும், அக்கருத்து தற்பொழுது நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் கூறிய அவர்,
மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர் மேகதாதுவில் அணை கட்டக்கூடாது, அதற்க்கான முயற்சிகள் மேற்கொள்ள கூடாது, அதற்காக எந்த வித அனுமதியும் அளிக்க கூடாது என்று பலமுறை தமிழக பாரதிய ஜனதா கட்சிகளின் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டது என தெரிவித்தார். மேலும் கலைஞர் நினைவு நாள் குறித்து கூறுகையில், கலைஞர் ஒரு சிறந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசியல்வாதி என்றும் அவர் மீது எப்பொழுதும் மதிப்பும் , மரியாதையும் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.