பொதுக்குழு சம்பவத்திற்கு பின் தண்ணீர் பாட்டிலை பார்த்தாலே அலர்ஜியாக இருக்கிறது… ஓபிஎஸ் வேதனை…!!!!

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு முடக்குவதை கண்டித்தும், ஆளும் கட்சியின் மக்கள் விரோத   போக்கை கண்டித்தும் பொதுக்குழுவில் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. மேலும் முல்லைப் பெரியாறு அணை, மேகதாது, காவிரி பிரச்சனை போன்ற பொது விவகாரங்களை உள்ளடக்கிய 23 தீர்மானங்கள் நிறைவேற்ற திட்டமிடபட்டிருந்தது. ஆனால்  சட்டத்திற்கு புறம்பான பொதுக்குழு நடைபெறுவதாக எதிர்ப்பு வலுக்க தொடங்கியதையடுத்து ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில்கள் மற்றும் காகிதங்கள் வீசப்பட்டது.

இந்நிலையில்  அதிமுக பொதுக்குழு சம்பவத்திற்கு பின் தண்ணீர் பாட்டிலை பார்த்தாலே அலர்ஜியாக இருக்கிறது என ஓபிஎஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இபிஎஸ் ஒரு சர்வாதிகாரி போல் செயல்படுகிறார். பிட்பாக்கெட் அடிப்பது போன்று பொது செயலாளர் பதவியைப் பெற நினைக்கிறார். அதிமுகவில் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகமாக வில்லை. குண்டர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கிறது என்று உச்சகட்ட கோபத்துடன் கடுமையாக தாக்கியுள்ளார்.