சிசேரியனுக்குப் பிறகு… இயல்புநிலைக்கு திரும்ப… சில எளிய டிப்ஸ்… வாங்க பாக்கலாம்..!!

இன்றைய காலகட்டத்தில் சுகப்பிரசவத்தை காட்டிலும் சிசேரியன் தான் அதிக அளவில் நடக்கின்றது. அதற்கு காரணம் பெண்களின் உடல் நிலை தான்.

பலவீனமான பெண்கள், உடலில் சத்தின்மை, கர்ப்பகால நோய் சிக்கல், பிரசவநேர சிக்கல் பல பிரச்சினைகள் காரணமாக சிசேரியன் பிரசவத்திற்கு ஆளாகின்றனர். சிசேரியன் பிரசவங்களை எதிர்கொள்ளும் பெண்கள் சுகப்பிரசவத்தை எதிர்கொண்ட பெண்களைக் காட்டிலும் சற்று உபாதை அதிகம் பெறுவார்கள். வழக்கமான பிரசவத்தை காட்டிலும் சிசேரியன் வலி மற்றும் இரத்தப்போக்கு போன்றவை அதிகமாகவே இருக்கும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல்நிலை சரியாவதற்கு ஆறு முதல் நான்கு வாரங்கள் வரை ஆகும். ஒவ்வொரு பெண்களும் இந்த காலத்தில் இருந்து வெளிவருவதற்கு மிகவும் அவஸ்தைப்படுவார்கள்.

முடிந்தது ஆறு மாதங்கள் பெண்கள் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் கீறல் இருக்கும். அறுவை சிகிச்சைக்கு முன்பு அப்பெண்ணுக்கு முதுகு தண்டுவடப் பகுதியில் செலுத்தப்படும் மயக்க ஊசி பல நேரங்களில் பிரசவத்திற்குப் பிறகு மயக்க உணர்வை தரும். அவர்கள் எளிதில் இயல்புநிலைக்கு திரும்புவதற்கான டிப்ஸ் குறித்துப் பார்க்கலாம்.

உங்களது வலி, காயம் ஆறவேண்டுமெனில் சரியான உணவு அவசியம்.ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற விட்டமின் சி உள்ள உணவுகள், ஓமேகா 3 ஃபேட்டி ஆசிட் கொண்ட நட்ஸ் ஆகியவை சாப்பிடுவது நல்லது. தயிர், மோர், யோகர்ட் போன்ற உணவுகளை உண்பதால் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகும். இதனால் வயிற்றுப் போக்கு ஏற்படமால் தடுக்க முடியும். குழந்தை பிறந்து முதல் 6 வாரத்திற்கு கவனமாக இருக்க வேண்டும். வலி முற்றிலும் குணமான பின்பு இயல்பு வேலைகளைச் செய்யலாம்.

பிரசவித்த பிறகு தளர்வாக இருக்கும் வயிறு, இயல்பு நிலைக்கு வர சில மாதங்கள் ஆகும். எனவே தரமான பெல்லி பேண்டை மருத்துவர் அனுமதியோடு அணியுங்கள்.மலச்சிக்கல், நீர் வறட்சி, உடல் சூடு, சிறு சிறு சூடு கட்டிகள் வராமல் தடுக்க போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்.

பிரசவத்திற்கு பின் உங்கள் மனநிலைகளும் அடிக்கடி மாறும், திடீரென கோபம், அழுகை, வெறுப்பு போன்ற உணர்வுகள் ஏற்படும். இந்த சமயத்தில் உங்கள் உறவினர்களுடன் அதிக நேரம் செலவிடுங்கள். உங்களை நீங்கள் தனிமைப் படுத்திக் கொள்ளாமல் மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள முயற்சியுங்கள்.

பிரசவத்திற்கு பிறகு எல்லா பெண்களுக்கும் கருப்பை சுருங்க தொடங்கும். அப்போது வலி உண்டாகும். சிசேரியனுக்கு பிறகு அறுவை செய்த இடம் தையல் பகுதியில் இதனோடு கருப்பை சுருங்குவதை மிக அதிக வலியை உண்டாக்கும். பிரசவத்திற்கு பிறகு நோய் தொற்று வராமல் பாதுகாக்க வேண்டும்.

முதல் எட்டு வாரங்கள் வரை ஆவது உடற்பயிற்சியை தவிர்க்கவேண்டும். பொதுவாக நான்கு முதல் ஆறு மாதங்கள் வரையாவது வாகனங்கள் ஓட்டுவது முதல் கனமான பணிகளை செய்வதை தவிர்க்க வேண்டும்.  உடலில் காயம் ஆறி இருக்கும். ஆனால் ஒரு வாரத்திற்கு ரணமாக இருக்கும். காயத்தை சுற்றியுள்ள தசைகள் பலவீனமாக இருக்கும். இதனால் கடினமான பணிகளை செய்வதை தவிர்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *