காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள்……. இறுதி செய்ய திமுகவுடன் ஆலோசனை….!!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்ய திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் , மதிமுக , விடுதலை சிறுத்தைகள் , இடதுசாரிகள் , கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி , இந்திய ஜனநாயக கட்சி , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து சந்திக்கின்றது . மேலும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு இறுதிசெய்யப்பட்டு விட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளை இறுதி செய்ய பேச்சுவார்த்தை தொடங்கியது .

Image result for காங்கிரஸ் திமுக  கூட்டணி

 

அண்ணா அறிவாலயத்தில் தற்போது நடைபெற்று வரும் இந்த பேச்சுவார்த்தையில்  திமுக தரப்பில் இருந்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக துரைமுருகன் தலைமையிலான அமைக்கப்பட்டிருக்கும் குழு சார்பில் துணைப் பொதுச் செயலாளர் பெரியசாமி கே.என் நேரு பொன்முடி போன்ற முக்கிய நிர்வாகிகளும் ,  காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின்  தலைவர் கே.எஸ்  அழகிரி தங்கபாலு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராமசாமி ஆகிய முக்கிய நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில் , இந்த பேச்சுவார்த்தை முடிவடைந்து திமுக சார்பில் 40 தொகுதிகளுக்குமான கூட்டணி கட்சி பட்டியல் வெளியிட இருக்கின்றது.