ஆலோசனை சொல்லுங்கள்…. ”ரூ.1,00,000 பரிசு”…. பிரதமர் மோடி அறிவிப்பு …!!

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள பள்ளி , கல்லூரிகள் , வணிக வளாகங்கள் , விளையாட்டு அரங்கங்கள் தியேட்டர்கள் அனைத்தையும் மூட மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.  மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நல்ல ஆலோசனை இருந்தால் கூறுங்கள் என்றும் ,  நல்ல கருத்துக்களைக் சொன்னால் ஒரு லட்ச ரூபாய் பரிசு என்றும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.