அடுத்தடுத்து நடந்த வாகனவிபத்து…. 2 பேருக்கு நேர்ந்த துயரம்…. தர்மபுரியில் சோகம்….!!

வாகனங்கள் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்திலிருந்து உருளைக்கிழங்கை ஏற்றிக்கொண்டு அவிநாசிக்கு லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை சேலம் மாவட்டம் எடப்பாடி செட்டிமாங்குறிச்சி பகுதியில் வசித்து வரும் சித்தையன் என்பவர் ஓட்டி வந்தார். இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த பிரதாப் சத்ரியன் என்பவர் மாற்று டிரைவராக வந்துள்ளார். இதனையடுத்து தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் புதூர்  பகுதியில் வந்தபோது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி சாலையில் தாறுமாறாக ஓடி முன்னால் சென்று கொண்டிருந்த கார், வேலிகற்கள் ஏற்றிச் சென்ற லாரி, கன்டெய்னர் லாரி, செப்டிக் டேங்க் லாரி போன்றவை மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் செப்டிக் டேங்க் லாரியில் இருந்த திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த கூலித் தொழிலாளியான ரத்தினவேல் மற்றும் உருளைக்கிழங்கு ஏற்றி வந்த லாரி டிரைவரான சித்தையன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் செப்டிக் டேங்க் லாரியில் வந்த பாண்டியன், பகவதிராஜ், குஞ்சுமணி, மதன்குமார், லாரன்ஸ், பிரகாஷ், சங்கர், மதன்குமார், லூகாஷ், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவர்களான மாரியப்பன், ரஞ்சித்குமார் போன்ற 11 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் ரோந்து படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கிய 11 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்பின் விபத்தில் இறந்த 2 பேரின் சடலத்தையும் காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தினால் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 4 மணி நேரம் பாதிக்கப்பட்ட போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் சீரமைத்தனர். இதுகுறித்து தொப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரி, தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *