அடுத்தடுத்த 2 கடைகளில் …. மர்ம நபர்களின் கைவரிசை …. வலைவீசி தேடும் காவல்துறையினர் ….!!!

மயிலாடுதுறையில் 2 கடைகளின் பூட்டை உடைத்து  பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை  காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அருகே பணமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜசெல்வம் என்பவர் சட்டநாதபுரம் ரவுண்டானா அருகே மளிகை கடை ஒன்றை வைத்துள்ளார். இவர் நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூபாய் 25,000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் ,கல்லாவில் இருந்த ரூபாய் ஒரு லட்சத்து 7 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் சிலர் திருடிச் சென்றுள்ளனர். இதேபோல் அருகிலுள்ள வினோத் ஏஜென்சி என்ற இரும்பு கடையையும் உடைத்து மர்ம நபர்கள் ரூபாய் 25 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளார்.

மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் சிலவற்றை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் இரண்டு கடைகளிலும் சேர்த்து ரூபாய் 1 லட்சத்து 72 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூபாய் 25,000 மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர் . இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருட்டு நடந்த இரண்டு கடைகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர் .அதில்  வடமாநில வாலிபர்கள் சிலர் கடைக்குள் வந்து சென்றது பதிவாகியுள்ளது. இதனால் வடமாநில வாலிபர்கள் இந்த திருட்டில்  ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதைதொடர்ந்து  வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *