ADMK ஒன்னு சேரனும்: டெல்லி எடுத்த முடிவு… உதறி தள்ளிய எடப்பாடி… செம கடுப்பில் பாஜக!!

இன்று பாஜக தலைமை அலுவலகம் ஆனா கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவியின் கருத்துக்களை தமிழில் விளக்கிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  பாஜக கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சி.டி ரவி ஜி அவர்கள் ஆங்கிலத்தில் பேசியதை தமிழில் மொழிபெயர்த்து சொல்கின்றேன். இது தேசிய தலைவர் ஜே பி நட்டா ஜீ அறிவுறுத்தல்ல. அகில இந்திய பொது செயலாளர் சிடி ரவி ஜி வந்திருக்கிறார்கள்.

அவர்கள் சொல்லியது 1972ல் ADMK கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது,  புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒரு தீய சக்தி என்று வார்த்தையை பயன்படுத்தினார். அது இன்றைக்கு 2023ல் கூட மாற வில்லை. அப்படியேதான் அந்த கட்சியும்  இருக்கு. தமிழ் மக்களுக்கு எதிராக, தமிழக கலாச்சாரத்துக்கு எதிராக அந்த கட்சி இருக்கு  என்று சொல்லி இருக்காங்க. அதன் பிறகு இன்னைக்கு ஈரோடு இடைத்தேர்தல் பொருத்தவரை,  இப்போ இருக்கக்கூடிய ஆட்சி மக்களிட்டிகளிடம் மிகப்பெரிய கெட்ட பெயரை வாங்கி இருக்கிறார்கள்.

குறிப்பாக விலையேற்றம், சொத்துவரி உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு என அனைத்து விதமான பிரச்சனைகளையும் அவர்களாகவே உருவாக்கி,  தமிழக கலாச்சாரத்தை பற்றி தொடர்ந்து திமுகவின் உடைய அமைச்சர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எம்பிக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது சிடி ரவி ஜி அவர்கள் சொன்னது,  தமிழக மக்கள் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு எதிராக இருக்கின்றார்கள் என்றும்,

இந்த நேரத்தில் தமிழகத்திற்கு தேவை ஒரு உறுதியான தேசிய ஜனநாயக கூட்டணி, உறுதியான,  நிலையான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். அதனால் தான் இன்று காலை சி.டி ரவி அவர்கள், நம்முடைய முன்னாள் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும்,  முன்னாள் தமிழகத்தினுடைய முதலமைச்சர் மாண்புமிகு பன்னீர்செல்வம் இருவரையும் சந்தித்து,  தேசிய தலைவர் சொல்லி இருக்கக்கூடிய கருத்துக்களை அவர்கள் முன்பு வைத்து விட்டு வந்திருக்கிறார்கள்.

அதே நேரத்தில் திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் ? ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் உறுதியான, நிலையான, ஸ்ட்ராங்கா நிற்கக்கூடிய வேட்பாளர் வேண்டும். அதற்கு தேவை தனித்தனியாக பிரிந்து நிற்காமல் ஒன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள். இதுதான் நம் கட்சியினுடைய கருத்தும் கூட. இதுல புதிதாக சொல்வதற்கு எதுவும் இல்லை. தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

சி.டி ரவி ஜி அவர்கள் சொன்னது வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 7ஆம் தேதி வரை இருக்கிறது. அதுவரை பொறுமையாக இருங்கள். பாரதிய ஜனதா கட்சியினுடைய நிலைப்பாடு,  எதிர்க்கட்சியாக தனித்தனியாக நிற்காமல்…  ஒரே அணியாக,  ஒரே வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு,  திமுகவை எதிர்த்து வெற்றி பெற வேண்டும் என்பது நம்முடைய அகில இந்திய தலைவருடைய விருப்பம்,  கட்சியினுடைய விருப்பம் என தெரிவித்தார்.

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என தொடர்ந்து ஓபிஎஸ் சொல்லிவரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தான் தொடர்ந்து பிடிவாதமாக இருக்கின்றது. இந்த நிலையில் தொடர்ந்து எடப்பாடி ஓபிஎஸ்ஸை இணைக்க மாட்டோம் என சொல்லிவருவதால் பாஜக டெல்லி மேலிடம் எடப்பாடி பழனிசாமி மீது கடும் கோபத்தில் உள்ளது.