ADMK-யால் முடியல…! BJP முகத்திரையை கிழித்த DMK… அதிரடி காட்டும் ஸ்டாலின்… காலரை தூக்கிவிடும் உதயநிதி …!!

திமுக இளைஞரணி சார்பில் நடந்து வரும் பயிற்சி பாசறையில் பேசிய அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,திரு. மோடி அவர்களே நான் ஏற்கனவே உங்களுக்கு சொன்னது மாதிரி… இங்கு  நடந்து கொண்டிருப்பது நீங்கள் நினைப்பது போன்று திரு.எடப்பாடி பழனிச்சாமி ஆச்சியோ அல்லது ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியோ கிடையாது. இது திராவிட மாடல் ஆட்சி. நம்முடைய தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய ஆட்சி. இங்க இருந்து போய் காசியில் நடத்திக் கொண்டிருக்கிற தமிழ் சங்கம் அப்படின்னு…

தமிழ்நாட்டுக்கு இதுவரைக்கும் என்ன செஞ்சு இருக்கீங்க ? ஒண்ணுமே செய்யல.  எனவே உங்கள் முகத்திரையை கிழித்து,  நீங்கள் ஒவ்வொரு  முறையும் மாநில உரிமை பறிக்கும் பொழுது,  அதற்கு குரல் கொடுத்து இந்தியாவிலேயே உங்களுக்கு சின்ன சொப்பனமாக திகழ்கின்ற ஒரே தலைவர் எங்களுடைய தலைவர் திரு. தளபதி அவர்கள்தான். எப்படி 2019 பாராளுமன்ற தேர்தலில் ஒட்டு மொத்த தமிழகமும் மோடி அவர்களை நிராகரித்ததோ,  அதேபோல் உங்களது கூட்டணி கட்சி அதிமுகவையும் மக்கள் நிராகரித்துள்ளார்.

இப்போ பயிற்சி பாசறை கூட்டம் நடத்தணும்ன்னா…  திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் தான் பயிற்சி பாசறை கூட்டம் நடத்த முடியும். ஏனென்றால் நம்முடைய கட்சிக்கு மட்டும்தான் அந்த வரலாறு இருக்கு. அதிமுககாரங்க நடத்த முடியுமா ? அவங்களுக்கு கொள்கையும் கிடையாது. அதிமுக கட்சியின் தொடங்கியதே திமுகவின் வெறுப்புக்காக தான். திமுகவை திட்டணும்ங்கிற ஒன்னுக்காக மட்டும்தான் அவர்களின்

ஒரே கொள்கை. ஏனெனில் இதை எல்லாம் புரிந்து கொண்டு இந்த பயிற்சி பாசறை நோக்கம், அனைத்து இடத்திலேயே கொண்டு போய் சேர்க்க வேண்டும். இது தொடர்ந்து நடக்க வேண்டும். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நம்முடைய தலைவருக்கும்,  நம்முடைய கழகத்திற்கும்,  நம்முடைய கூட்டனிக்கும் பெரிய வெற்றியை நீங்கள் எல்லாம் தேடித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

Leave a Reply