அத்திவரதர் ”இன்னும் 48 நாட்கள் வேண்டும்” தரிசனம் நீட்டிக்க கோரிக்கை…!!

அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்திவரதர் தரிசனம் ஜூலை 1_ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. 45 நாட்கள் நடைபெறும் இந்த தரிசனத்தை மேற்கொள்ள தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து செல்கின்றனர். அத்திவரதர் தரிசனம் இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்து வருகின்றது.வருகின்ற 17-ஆம் தேதி முதல் அத்திவரதர் மீண்டும் குளத்தில் வைக்கப்பட இருக்கின்ற சூழலில் அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க வேண்டுமென்று தமிழரசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்  செய்துள்ளார்.

Image result for அத்திவரதர்

அந்த மனுவில் , அத்திவரதரை  கூட்ட நெரிசலால் முழுமையாக தரிசிக்க முடியவில்லை, முதியோர்கள் , பெரியவர்கள் என இன்னும்  லட்சக்கணக்கான பக்தர்களும் தரிசனம் செய்ய எதுவாக அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டுமென்று அந்த மனுவில் சொல்லப்பட்டுள்ளது.உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஆதிகேசலு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை அவரசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது.

Image result for அத்தி வரதர்

அதற்கு இதை மனுவாக தாக்கல் செய்தால் அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்படும் என்று முறையிட்ட வழக்கறிஞர் பிரபாகரனுக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.இன்னும் 3 நாட்கள் மட்டுமே த்திவரதர் தரிசனம் உள்ளதால் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாரம்பரிய ஐதீக நடைமுறையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று இந்த வழக்கில் நீதிமன்றம் சொல்ல வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *