“அடேங்கப்பா இவ்ளோ கோடியா” ….? “ஐபிஎல் மூலம் கோடிகளில் நனையும் பிசிசிஐ” ….!விவரம் இதோ ….!!!

 ஐபிஎல் தொடர் டி.வி ஒளிபரப்பு உரிமை மூலமாக பிசிசிஐ-க்கு சுமார் ரூபாய் 36 ஆயிரம் கோடி வரை கிடைக்க உள்ளது .

ஐபிஎல் டி20 போட்டியை ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரூபாய் 16,347 கோடிக்கு பெற்றுள்ளது. இதனிடையே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு(2023- 2027 வரை) ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை பெற முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் அதேசமயம் அடுத்த ஆண்டு முதல் ஐபிஎல்-லில் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக இருப்பதால் போட்டிகளும் 60 லிருந்து 74 ஆக அதிகரிக்க உள்ளது. இதனால் இம்முறை ஐபிஎல் ஒளிபரப்புக்கான டிவி ஒளிபரப்பு  உரிமமும் இரட்டிப்பாக அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது.

இதனால் ரூபாய் 30 கோடி முதல் ரூபாய் 36 ஆயிரம் கோடி வரை ஐபிஎல் போட்டியின் ஒளிபரப்பு உரிமம் தொகையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார் .இதையடுத்து அடுத்த சீசன் ஐபிஎல்-லில் இடம்பெறும் 2 புதிய அணிகளை வாங்கும் உரிமையாளர் யார் என்பதை அடுத்த வாரம் பிசிசிஐ அறிவிக்க உள்ளது.இதனிடையே பிரபல கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் நிறுவனம் ஐபிஎல்-லில் புதிய அணியை வாங்குவதற்காக டெண்டர் விண்ணப்பத்தை வாங்கி உள்ளது. இதனால் ரசிகர்களிடையே அடுத்த சீசன் ஐபிஎல் தொடர் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *