அறைநிலைத்துறை கூடுதல் ஆணையர் சஸ்பெண்ட்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ..!!

அறைநிலைத்துறை கூடுதல் ஆணையர் கவிதா மீதானசஸ்பெண்ட் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சோமாஸ்கந்தர் சிலை மோசடி வழக்கில் அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் கவிதா மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வழக்கு பதிவு செய்தது. மேலும் இந்த வழக்கில் அவர் கைதும் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து கவிதா  சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இந்நிலையில்  தன்னுடைய சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து கவிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Image result for காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சோமஸ்கந்தர் சிலை மோசடி

இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது ,  கவிதா மீதான நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்  அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் கவிதா மீது  நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு 4 வாரம் உத்தவிட்டுள்ளது.