அதானி குழுமம் மீதான ஹிண்டர்பெர்க் அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து வெள்ளிக்கிழமை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பாக தான் அதானி நிறுவனத்தின் மீது ஹிண்டர்பெர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கை மீது உச்ச நீதிமன்றமே கண்காணித்து விசாரணையை நடத்த வேண்டும் என்ற ஒரு கோரிக்கை வலியுறுத்தி பொதுநல வழக்குகளை தாக்கல் செய்யக்கூடிய வழக்கறிஞர் என்.எம் சர்மா உள்ளிட்ட சிலர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனுவை உடனடியாக விசாரிக்க விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பாக கோரிக்கையானது வைக்கப்பட்டது.
தற்போது வரும் வெள்ளிக்கிழமை வழக்கானது விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்திருக்கிறார். எந்த மாதிரியான விசாரணையாக நடைபெறும் என்பதெல்லாம் நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டி இருக்கிறது. ஏனென்றால் ஒரு பெரிய பிரச்சனை ஏற்பட்டு தற்போது நாடாளுமன்றத்தில் பெரும் புயலை இந்த விகாரம் எழுப்பி இருக்கக்கூடிய சூழலில் நீதிமன்றத்தின் தலையீடு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை கவனிக்க வேண்டியிருக்கிறது.
ஹிண்டர்பெர்க் நிறுவனமும் ஒரு தனியார் நிறுவனமாக இருக்கிறது. அதானி குழுமமும் தனியார் நிறுவனம். இது தொடர்பாக இன்னும் எந்த ஒரு வழக்கமும் பதிவு செய்யப்படவில்லை. இதனை நீதிமன்ற விசாரணையாக உச்சநீதிமன்றம் எப்படி எடுப்பார்கள்? எப்படி பார்க்க வேண்டியது இருக்கின்றது ? ஒருவேளை மனுதாரர்கள் சார்பாக இதில் ஒருதலை பட்சமாக இருக்கிறது அல்லது அரசிடம் இருந்து உரிய விசாரணைக்கான வரம்புகள் என்பது இன்னும் அமைக்கப்படாமல் இருக்கிறது, பெருத்த நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. பங்குச்சந்தையில் பெரும் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. பொதுமக்கள் சுதந்திரமாக இருப்பதற்காக அடிப்படை உரிமை என்பது பறிக்கப்பட்டிருக்கிறது.
இப்படியான சில விஷயங்களை எல்லாம் மேற்கொண்டால் உச்ச நீதிமன்றம் இதனை விசாரிக்கும். பொதுவாக உச்ச நீதிமன்றத்தை நேரடியாக எப்போது நாடுவார்கள் என்றால் ? ஆர்டிகிள் 32 அதுதான்… அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டிருக்கக்கூடிய அடிப்படை உரிமைகளை மீறும் போது… நேரடியாக உச்சநீதிமன்றத்தை நாட முடியும். அந்த வகையில் தான் இங்கு வந்திருக்கிறார்கள். இப்போது அதானி நிறுவனத்தினுடைய குளறுபடிகளும் அதன் மீது குற்றச்சாட்டுகளை வைத்த ஹிண்டர்பெர்க் அறிக்கையும் இந்தியாவில் இருக்கக்கூடிய தனிநபருடைய சுதந்திரத்தை, அடிப்படை உரிமையை பறிப்பதாக இருக்கிறது என்றால் நீதிமன்றம் இதனை உடனடியாக கவனத்தில் கொள்வார்கள். எனவே இந்த ஒரு விஷயத்தை தான் பார்க்க வேண்டி இருக்கிறது. வரும் வெள்ளிக்கிழமை தெரியும். இது விசாரணைக்கு உகந்ததா ? அல்லது இல்லையா ? என்பதை உச்சநீதிமன்ற விசாரணையில் தெரிந்து கொள்ளலாம்.